ரோஜா ஒன்று என் காதோரம் வந்து
க(வி)தை பேசிற்று...
"இருந்தாலும் ஒரே மணம்
பறித்தாலும் ஒரே மணம்
முகர்ந்தாலும் ஒரே மணம்
பரமனுக்குப் படைத்தாலும் ஒரே மணம்
பாவை அவள் வைத்தாலும் ஒரே மணம்
பிய்த்தாலும் ஒரே மணம்
வாடி உலர்ந்தாலும் ஒரே மணம்
ஆயின்...உங்களுக்கு
களிப்பிற்கு ஒரு முகம்
கவலைக்கு ஒரு முகம்
வஞ்சனைக்கு ஒரு முகம்
வாசனைக்கு ஒரு முகம்
அசிங்கமாய் ஒரு முகம்
அவலமாய் ஒரு முகம்
நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு முகம்
மொத்தத்தில் எங்கே தொலைந்தது
உங்கள் திருமுகம்?"
கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை...
உங்களிடம்...?
எங்களிடமும் இல்லை..நல்ல ஒப்பீடு..
ReplyDeleteஇயற்கையின் கேள்விகளுக்கு பதில் தேடல் இயலாது , நல்லா இருந்த்தது
ReplyDeleteஜேகே
இந்த கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது கேயார். அருமையான கவிதை. நன்றி.
ReplyDeleteரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க..... பதில் தேடி ஆலையம் சென்றேன் அங்கே தான் புரிந்தது நாம் வணங்கும் ஆண்டவனுக்கே ஆயிரம் முகங்கள் என்று...
ReplyDeleteநல்லக்கவிதை.... பதில்தான் என்னிடமும் இல்லை!
ReplyDeleteநல்ல நடை
ReplyDeleteஅருமை