Wednesday, July 20, 2011

நிழல் கவிதை - 2


கடலைப்
பார்த்தமர்ந்து,
அலையோசையில்
நம்மையிழந்து,
கரையோடு
பேச்சாய்
இருந்த்தெல்லாம்
மாறிப்போயாச்சு!

கடலையும்,
கரையையும்,
நெனப்பையும்
வீட்டிலே
அடைச்சு வெச்சாச்சு...
உன்னைப் போல...!!

6 comments:

  1. நண்பா!

    மீண்டும் ஒரு அருமையான படைப்பு...!
    எத்துனை முறை நமது கனவுகளையும், கசப்புகளையும், கசடுகளையும்(!) பகிர்ந்திருக்கிறோம்...! இன்று குடும்பச் சூழல் நம்மை கட்டிப் போட்டு விட்டில் வை(த்)தாலும், மீறிப் பகிர்ந்து கொள்ள முயற்சிதானே செய்து கொண்டிருக்கிறோம்!

    ஸாரி! நீ சொல்ல வந்ததே வேறு...நான் எடுத்துக்கொண்டதே வேறு! இல்லையா நண்பா??!!

    என்றும் அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. //கடற்கரை

    ஈரத்தில்

    உன்கரம் பற்றி

    கதை பேசியபடி

    காலாற நடந்திருந்தேன்

    ஏதோ நினைவில்

    திரும்பில் பார்த்தேன்,

    எனது பாத சுவடருகே

    காணப்படாத

    உனது பாத சுவடு

    நினைவுறுத்தியது

    நீயில்லாத தனிமையை.....!//

    //கடல் அலையும்,
    கடற்கரை மணலும்,
    நினைவுறுத்துகிறது
    உன் அருகாமையின்
    இழப்பினை.......! //

    நிழல் கவிதையை படிக்கும் போது என்னோட இந்த பழைய வரிகள் நினைவுக்கு வருகின்றன

    ReplyDelete
  3. நண்பா

    அன்புக்கும் காதலுக்கும் பார்வையில் வித்யாசம் இருக்கலாம் அதன் உண்ர்வில் இருக்காது , நீ சொன்னதும் இந்த கவிதையின் மற்றொரு பரிமாணமாய் எடுத்து கொள்கிறேன் சொல்ல வந்தது மனைவியை பற்றி நீ சொன்னது தோழமை பற்றி மனைவியும் ஒரு தோழி தானே

    நன்றி நண்பா

    ஜேகே

    ReplyDelete
  4. அற்புத வரிகள்

    ReplyDelete
  5. alakaana arumaiyaana varikal..
    vaalththukkal..

    ReplyDelete
  6. கல்யாணி சுரேஷ் நன்றி பின்னூட்டமாய் தஙகளின் கவிதையை இங்கே தந்ததர்க்கும் தங்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
    அருமையான கவிதையும் கூட

    நன்றி அரசன்

    ஜேகே

    ReplyDelete