நீ எல்லையை நிர்ணயிக்க,
நான் மீறுகிறேன்...
நீ மரபு தனை விதிக்கிறாய்;
நான் தாண்டுகிறேன்...
நீ வரையறுக்க.
நான் கரையின்றி ஆகிறேன்...
கட்டுப்பாடு என்று நீ நினைக்கிறாய்;
விடுதலை என்கிறேன் நான்...
நீ எல்லையாய்,
மரபாய், விதியாய் இருக்க
மீறுதலும், கரை தாண்டுதலுமே
இயற்கையன்றோ?!
நீ எல்லாமாய் இருக்க,
நான் எல்லையாய்,
மரபாய், விதியாய் ஆகுதலே
நியமம் அன்றோ?!
இந்த கவிதையோட கடைசி பாரா மட்டும் புர்லீங்க்ன்னா!
ReplyDeleteஅதை விட்டுபோட்டா கவிதை சூப்பர்!
-கேயார்
கேயார்
ReplyDeleteதாயாய் அவளிருக்க சேயாய் எல்லை மீற நான் யத்தனிக்கிறேன் நான் தந்தையாய் இருக்க அவளுக்கு நானே எல்லையாகிறேன்
எல்லை மீறுதல் சேயாய் தோழனாய் இளவட்ட விடலையாய் எனக்கு வாழ்வில் இனிமை சேர்க்கிறது அவளே யாதுமாகிவிட நான் தந்தையாய் எல்லையாய் ஆகிறேன் அப்பொழுது முதுமை சேர்கிறது
எல்லை மீறுதல் இனிமைக்கு இயற்கை எல்லையாதல் முதுமைக்கு நியமம் இத தான் சொல்ல வந்தேன் சொன்னேனான்னு தெரியலை
நன்றி கேயார்
ஜேகே
நல்ல படைப்பு
ReplyDeleteகவிதையின் இறுதிப் பகுதிக்காக
நீங்கள் கொடுத்துள்ள விளக்கமே
ஒரு கவிதையைப் போல்தான் உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
நீ எல்லாமாய் இருக்க,
ReplyDeleteநான் எல்லையாய்,
மரபாய், விதியாய் ஆகுதலே
நியமம் அன்றோ?!
nalla kavithai..
vaalththukkal..
நன்றி ரமணி
ReplyDeleteநன்றி விடிவெள்ளி
ஜேகே
உங்கள் விளக்கம் அருமை!
ReplyDeleteநன்றி தென்றல்
ReplyDelete