Monday, January 31, 2011

தாம்பத்யம்

ஊடல் கொண்டு, கூடல் செய்து,
கடமை பயின்று, கர்மம் கழித்து,
முடிந்தால் சந்ததி பெருக்கி வாழ்வதென்பர்!
கடமையும், கர்மமும் தானே கழிய
சந்ததி சிலருக்கு மட்டுமாகும்.
ஊடல் தின நிகழ்வாகி,
தான் பத்தியமாயிருக்க,
தாம்பத்யம் இங்கே தேடலாகிறது!

6 comments:

  1. நல்ல இருக்கு ஜே.கே (இன்னும் கொஞ்சம் தேடியிருக்கலாம் போல )

    ReplyDelete
  2. அற்புதம் கவிதை நல்லா இருக்குங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சகிப்புத் தன்மை குறைவு,வேலைச்சுமை/மனச்சுமை இவற்றின் பாரம்,இன்னும் எண்ணிலடங்காதவை..........தாம்பத்தியத்தின் தாத்பரியத்தை உடைக்கும் ஆயுதமாகிறது!

    ReplyDelete
  4. தான் பத்தியமாயிருக்க,
    தாம்பத்யம் இங்கே தேடலாகிறது!
    SUPER.........

    ReplyDelete
  5. தேடுதல் தொடரும் வேல்கண்ணண்

    நன்றி ஜேகே

    வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அரசன்

    ரொம்ப சரி தென்றல்சரவணண் , வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தெனறல்சரவணன்

    ரசித்தமைக்கு நன்றி சித்ரா

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரேவா

    இங்கே நான் “தினமொரு கவிதை” என்ற வகையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன் , தினமும் ஒரு கவிதையேனும் நிச்சயம் இருக்கும் தொடர்ந்து தங்கள் அனைவரையும் வருமாறு வேண்டிக்கொள்கிறேன் , தங்களின் கருத்துக்கள் தான் என் எழுத்துக்களை இன்னும் மெருகூட்டும் என்று நம்புகிறேன்.

    நன்றி
    ஜேகே

    ReplyDelete