தன்னிலே விதைத்து,
தன்னையே வதைத்து,
என்னையே தந்தாளம்மா!
என்னையே தந்தாலும்
தாய் போலாகுமா?
விண்ணையே அளந்து, மண்ணையும் பிளந்து,
தேடினாலும் கிடைக்குமா?
தாயன்பு போலிங்கு வேறேதம்மா?
சிறையிலே சிறகு வைத்து,
தன்னையே சிறையாய் வைத்து,
விண்ணிலே விட்டாளம்மா!
பறந்தாலும், திரிந்தாலும்
தாயன்பு கிடைத்திடுமா?
தாயன்பு போலிங்கு வேறேதம்மா?
என் தாய் போலாகுமா?
தன்னிலே ஓளித்து, ஊணிலே வளர்த்து,
மண்ணிலே விட்டாளம்மா!
விதைத்தாலும், வளர்த்தாலும்
தாயன்பு வந்திடுமா?
தாயன்பு போலிங்கு வேறேதேம்மா?
என் தாய் போலாகுமா?
மடி தந்து, மதி தந்து,
உடை தந்து, உணர்வும் தந்து,
விழி தந்து, வழி தந்து,
வாழ்வும் தந்து, வாழ்வாய் வந்து,
என்னுள்ளே இருப்பாளம்மா!
இருந்தாலும், இறந்தாலும்,
தாயன்பு அகலாதம்மா!
தாயன்பு போலிங்கு வேறேதேம்மா?
என் தாய் போலாகுமா?
wonderful:)
ReplyDeleteWonderful:)
ReplyDeleteமிகவும் ரசித்தேன் ,...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க
மிக அருமை...
ReplyDeleteஇந்துக் கடவுள் மூவரின் வேலையையும்
ReplyDeleteதனியாளாய் செய்யும் சக்தியவள்.
படைத்தாள், காத்தாள், அளித்தாள்.
நன்றி chisank
ReplyDeleteநன்றி அரசன் , நிச்சயமா முயல்வேன் அரசன்
நன்றி தோழி பிரஷா
உண்மை தான் வாசன் கடவுள் போலிவள் கடவுளுக்கும் மேலானவள்
நன்றி வாசன்
ஜேகே