Monday, March 1, 2010

என்றோ எழுதிய கவிதை - 15

காலேஜு போவுறப்போ, இன்னா நோட்டாயிருந்தாலும் மொத பக்கத்துல பிள்ளையார் சுழியோட, நடுவுல சின்னதா ஒரு கவிதை இருக்கும். சில சமயம் ஸீரியஸாவும், பல சமயம் லொள்ளாவும், அந்த வயசுக்கேத்த எதிர்பார்ப்போட, ஏக்கங்களோட இருக்கும். அப்படி நான் எழுதிய ஒரு கவிதை............

பாவை நீ
பூவை வைத்தாய்.......
பொட்டும் வைத்தாய்...
நெஞ்சை மட்டும்
ஏன் விட்டு வைத்தாய்?!!

புரியாதவங்களுக்குச் சுளுவாக

பாவை நீ
பூவை வைத்தால் கூந்தலுக்கு அழகு...
பொட்டு வைத்தால் நெற்றிக்கு அழகு...
நெஞ்சில் என்னை வைத்தாலோ அழகோ அழகு!

திருவல்லிக்கேணி •ப்ரெண்ட்ஸை பாத்துட்டு, 45B பஸ்ல, (ஈவினிங்) காலேஜ் போற ரூட்டுல (தொங்கிகினே) நோட்டை ரோட்ல விட்டுட்டேன்! ஸ்லோவா பஸ் போனதுல எப்படியோ இறங்கி நோட்-ஐ தேடி (ஓடி!) வந்தேன். அதற்குள் யாரோ எடுத்து கைல வெச்சிருந்தாங்கோ.

டேங்க்ஸ் சொல்லி 'ஜுட்'றதுக்கு முன்னாடி, எடுத்து வெச்ச மகராசனோட கிண்டல் கேள்வி "நோட்புக்கை(யும்) ஏன் விட்டு வைத்தாய்?!"

4 comments:

  1. அருமை நண்பா ,

    பழைய நினைவுகள், சென்னையும் , அதன் தெருக்களில் நாம் அடித்த கூத்தும் கண் முன் வந்து செல்கிறது,

    அந்த கிண்டல் ரொம்ப பிடித்தது

    நன்றி ஜேகே

    ReplyDelete
  2. கவிதை கலக்கல்...அதைவிட ..கடைசி கேள்வி மிக அருமை.

    ReplyDelete
  3. கவிதை சூப்பர்...நோட்டை எடுத்து வைத்தவரின் நக்கலும் சூப்பர்....இதை ஏன் இவ்வளவு நாளா எழுதாம் அவிட்டு வச்சீங்க..

    ReplyDelete