கருவாய் காதல் உள்ளத்துள்
உள்ளத்து காதல் உணர்வாய் ஜனனம்
ஜனித்ததும் பருவம் கண்டது
கண்டதெல்லாம் சுகமானது
சுகமானது மட்டும் உணர்வானது
உணர்வில் அவளன்றி வேறேதும் அறியாதது
அறியாததெல்லாம் தெரிவித்தது
தெரிந்ததெல்லாம் புதிதானது
புதிதெல்லாம் புதிரானது
புதிரெல்லாம் விடையானது
விடை கண்டும் காதல் வினாவாகும்
வினாவிற்கு விடை தேடும் மனது!
அறியாததெல்லாம் தெரிவித்தது
ReplyDeleteதெரிந்ததெல்லாம் புதிதானது
புதிதெல்லாம் புதிரானது
புதிரெல்லாம் விடையானது ///
இந்த வரிகளை ரசித்துப் படித்தேன் !
அந்தாதிக் கவிதை..... காதலை போற்றுது....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ரசித்ததற்க்கு நன்றி தேவன் மாயம்
ReplyDeleteஜேகே
வாழ்த்துக்களுக்கு நன்றி கருணாகரசு
ஜேகே
//
ReplyDeleteஅறியாததெல்லாம் தெரிவித்தது
தெரிந்ததெல்லாம் புதிதானது
புதிதெல்லாம் புதிரானது
புதிரெல்லாம் விடையானது //
வார்த்தை ஜாலம்...
நன்றி புலவன் புலிகேசி
ReplyDeleteஜேகே
நல்லாருகீங்களா ஜே.கே,சந்தர்,ப்ரபா,கேயார்?
ReplyDeleteரொம்ப நாள் ஆச்சுதான். :-)
விடுபட்டு போயிருந்த கவிதைகள் எல்லாம் வாசித்தேன்.
நல்லாருக்கு மக்காஸ்!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பா ரா...
ReplyDelete