Saturday, February 27, 2010

சுஜாதா!


மரபுக் கவிதைகளுக்கு நடுவே
ஒரு புதுக்கவிதை!

நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குள்
ஒரு போன்ஸாய்!

வீட்டுக்கு வீடு ஜன்னலில்
குடி புகுந்த புது நிலவு!

ஞான தாகத்தை லேசாய்
தீர்த்த பானகம், பருகிட
மீண்டும் தாகம் தரும் அமுதம்!

உன் புத்தகங்கள் படித்தாலும் ரத்த அழுத்தம்
படிக்காவிட்டாலும் தான்!

உன் எழுத்துக்கள் வந்தது
நன்கறிந்த தமிழ் வார்த்தையில் தான்
ஒவ்வொரு முறையும் புதுமணப்பெண்ணாய்!

சங்க இலக்கியம் போல் நீ
தந்தது தொழில்நுட்ப இலக்கியம்
பாமரனையும் பட்டதாரியாக்கினாய்!
பட்டதாரியையும் பாமரனாக்கினாய்!!

பாதரசம் போல் உன் படைப்புகள்
படிப்போரின் திறன் பொறுத்து
உருவம் பெறும்!

பழரசம் போல் உன் கருத்துக்கள்
ருசிப்போரின் ரசனை பொறுத்து
ரசிப்பு தரும்!

அருவம் ஆகி நின்றபோதும்
உருவமாய் இருக்கின்றாய்
பல நூல்களில்,

உன்னை பத்திரமாய் வளர்த்து வருவேன்,
என் அகத்தில் நூலகமாய்,
வளர்ந்த பின் என் பிள்ளை
படிக்க கொடுப்பதற்கு!


எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் மறைந்த வருடம் எழுதப்பட்டது.
திரு சுஜாதா நினைவு நாள் - 27/02/2010.

9 comments:

  1. :) - நன்றி D.R.Ashok


    //உங்கள் இந்த பதிவை
    இங்கேஇணைத்துள்ளேன்//

    நீங்க இணைத்த தளத்தை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்
    எங்கள் பகிர்வை பகிர்ந்து கெளரவித்ததற்கு
    நன்றி Tech Shankar
    நல்ல சந்தோஷமும் கூட

    Thanks Tech Shankar

    ஜேகே

    ReplyDelete
  2. நாண்றியுடன் நானும் அவர் ரசிகனாய்..

    ReplyDelete
  3. //நன்றியுடன் நானும் அவர் ரசிகனாய்..//
    நன்றி புலிகேசி

    ஜேகே

    ReplyDelete
  4. மிக அழகா கவிதையை (சுஜாதா வை) வடித்துள்ளீர்கள்.....

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி கருணாகரசு

    ஜேகே

    ReplyDelete
  6. எல்லா வரியும் அருமை ... '' கடைசியில் பிள்ளைகள் படிக்க கொடுப்பதற்கு '' மிக அருமை ... நாம் கண்ட அற்புதம் பல தலைமுறைகளுக்கு செல்லும் இதே கடைசி வரியோடு.....

    ReplyDelete
  7. வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும் நன்றி பத்மநாபன்...

    ஜேகே

    ReplyDelete