Wednesday, February 10, 2010

யாசகம்

ஓட்டையான ஒடெடுத்து
ஓடி வந்தேன் யாசிக்க
போட்டெதெல்லாம் போதவில்லை
போன இடம் தெரியவில்லை

கேட்கத்தான் யாருமில்லை
கேட்டுத்தான் பலனுமில்லை
கொடுத்தாலும் போதவில்லை
கொண்டு செல்ல இடமுமில்லை

சேதி சொல்ல யாருமில்லை
தேதி சொல்ல ஆளுமில்லை
முடிவுல அவனுமில்லை
முயற்சியில மீளவில்லை

அனுபவத்தை தேடவில்லை
அனுபவமா “அவன” பார்க்கவில்லை
தேடுதலில் சளைக்கவில்லை
தேடுதலே அவனென புரியவில்லை!!

8 comments:

  1. அடேங்கப்பா! (1)

    ReplyDelete
  2. கவிதை முதலில் தத்துவமும் கடைசியில்.... நாத்திகமும் பேசுவதாய் நினைக்கிறேன்... சரியா?

    ReplyDelete
  3. மென்மேலும் கவி படைக்க் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி விதூஷ்,

    நன்றி பாலாசி

    வழக்கம் போல் புன்னகைக்கு நன்றி சிவாஜி சங்கர்

    சி. கருணாகரசு ,

    நண்பரே

    நாத்திகம் இல்லை கருணாகரசு,

    //”அனுபவத்தை தேடவில்லை
    அனுபவமா “அவன” பார்க்கவில்லை
    தேடுதலில் சளைக்கவில்லை
    தேடுதலே அவனென புரியவில்லை!! ”//

    இந்த வரிகளில் அனுபவமும், தேடுதலுமே “அவன்” என்று சொல்ல முயற்ச்சித்திருக்கிறேன். இறைவன் அனுபவமாகவும் அதை அடையும் முயற்சியாகவும் தான் இருக்கிறான் என்று கூற யத்தனித்தேன், சரியாக சொல்லவில்லையோ?
    கண்ணதாசனின் கவிதையின் பாதிப்பு என சொல்லலாம்

    மிக்க நன்றி கருணாகரசு

    ஜேகே

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி நிலாமதி

    நன்றி புலவன் புலிகேசி

    ஜேகே

    ReplyDelete