Sunday, January 31, 2010

என் நிலவே!

என் காதல் வானில் ஒரு வெண்ணிலவே
அது வளர்ந்து வந்தது என் நெஞ்சிலே
தாயின் கனிவை கண்டதுன் உறவிலே
அது சேயாய் வளர்ந்த்துன் கருவிலே

ஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே
கூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே
காதல் பசலையும் உன் பிரிவிலே
அது தீரும் நேரமோ நான் உன் அருகிலே

உன்னால் வந்த காதல் நோயிலே
தேய்பிறையாய் தேய்ந்தேனடி பெண்ணிலவே
நோயே மருந்தாம் வள்ளுவன் சொல்லிலே
உன்னில் நான் தெளிந்தேனடி பொன்னிலவே

என் இரவின் இருள் நீக்கும் வெண்ணிலவே
பகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே
வானில் தேய்ந்து வளரும் வெண்ணிலவே
என்னோடு இருக்கையிலே என்றும் முழுநிலவே…

4 comments:

  1. காதல் ரசம் சொட்டுகிறது

    ReplyDelete
  2. வாவ் .... மிக அருமை

    ReplyDelete
  3. ஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே
    கூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே
    காதல் பசலையும் உன் பிரிவிலே
    அது தீரும் நேரமோ நான் உன் அருகிலே

    //

    அருமையான கவிதை

    ReplyDelete
  4. //காதல் ரசம் சொட்டுகிறது//

    நன்றி புலவன் புலிகேசி

    //வாவ் .... மிக அருமை//
    நன்றி வேல்கண்ணண்

    நன்றி தியா

    ReplyDelete