Saturday, February 20, 2010

கனவும் நிஜமும்!

என் மரணத்தை நானே
கண்டேன் கனவினில்

கண் மூடி கால் நீட்டி
நடுக்கூடத்தில் நான்!

இதோ சில மணியில்
நான் பஸ்பமாவது உறுதி!

சுடும் நெருப்பின் பயம்
கனவை கலைத்தது!

இன்று கனவில், நாளை
நிஜத்தில்!

இடையில் கனவாய் நிஜ
வாழ்க்கை!!

7 comments:

  1. நெஜம்தாங்க...கனவுலையும் சுடுமேன்னுதான் பயப்படுறோம்...

    நல்ல கவிதை...

    ReplyDelete
  2. கெட்ட கனவா நெனச்சி மறந்துடுங்க.

    ReplyDelete
  3. உறங்குவது போலும் சாக்காடு :)

    ReplyDelete
  4. நன்றி பாலாசி

    இதெல்லாம் அப்ப அப்ப பயமுறுத்தும் மறந்துடறேனுங்க, நன்றி கருணாகரசு

    நன்றி புலிகேசி

    ஆமாம் உண்மையில் விழிப்பு இருக்கத்தான் செய்கிறது, நன்றி விநாயகமுருகன்

    ஜேகே

    ReplyDelete
  5. கனவிலிருந்து மீண்டு எழுந்தாலும்
    இறுதி வரியில்
    //இடையில் கனவாய் நிஜ
    வாழ்க்கை!! // சுடுகிறது தோழா

    ReplyDelete
  6. //இடையில் கனவாய் நிஜ
    வாழ்க்கை!! // சுடுகிறது தோழா
    நிஜம் சுடத்தான் செய்கிறது சில சமயங்களில் தோழரே

    நன்றி வேல்கண்ணண்

    ReplyDelete