Wednesday, February 17, 2010

காத்திருந்தேன்!

காத்திருந்தேன் நான் காத்திருந்தேன்
கானல் நீரும் கண்ணீராகும் வரை
காத்திருந்தேன்
என் நிழலும் இருளில் மறையும் வரை
காத்திருந்தேன்
நிலவும் கூட கதிராகும் வரை
காத்திருந்தேன்
அல்லி மொட்டும் மலராகும் வரை
காத்திருந்தேன்

இராமனுக்காக சீதை அன்று
காத்திருந்தாள்
அந்த சீதைக்காக இராவணணும்
கூட காத்திருந்தான்
கடமைக்காக கர்ணணும் தானே
காத்திருந்தான்
காதல் மடமைக்காக நானும்
இங்கே காத்திருந்தேன்

உள்ளத்தில் உன்ன வைச்சு
காத்திருந்தேன், என்
உயிருக்குள்ளே ஒளிச்சு வெச்சு
காத்திருந்தேன்
என் ஆயுளில் பாதி உனக்களிக்க
காத்திருந்தேன்
இப்போ மிச்ச மீதி ஆயுளும் போக
காத்திருந்தேன் நான் காத்திருந்தேன்

4 comments:

  1. ராஜா சார் கிட்ட கொடுத்து "காத்திருந்து காத்திருந்து" பாணியில் ஒரு ட்யூன் போட சொல்லலாம்...நல்லா இருக்கு

    ReplyDelete
  2. கவிதை நடையில் கொஞ்சம் மாறுதல் தேவைப்படுகிறது. ( இது என் கருத்து)

    ரொம்ப காத்திருக்காம... காரியத்தில் இறங்கங்க....

    ReplyDelete
  3. அருமையான கவிதை வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவரே

    இறங்கவிடுகிறேன் கருணாகரசு, நன்றி கருணாகரசு

    வாழ்த்துக்களுக்கு நன்றி தியா

    ReplyDelete