Thursday, February 25, 2010

பசுமைப் புரட்சி!

கல்லும் மண்ணுமாய் நகரங்கள்
மழையும் பசுமையும் காணவில்லை!

தன்னுயிர் காக்கும் மாந்தர்கள்
புத்துயிர் தரும் தாவரம் வளர்க்க
இன்றே புது நீதி செய்குவோம்!

இலை தழை வெட்ட ஓராண்டு சிறை!
செடி கொடி கொய்தால் ஆறாண்டு சிறை!!
மரம் வெட்டினால் ஆயுள்!!!
காடு தோப்பு அழித்தால் மரணம்!!!!

தன்னுயிர் காக்க தன்னோடு தாவரம் வளர்ப்பர்
பசுமை தழைத்தோங்கும்
தரணி குளிர்ந்துபோகும்
ஓவ்வொரு புது ஜனனத்தில் ஒர்
மரம் நடுவோம்!

இனி வரும் தலைமுறை
பசுமையில் வாழ புது விதி செய்குவோம்!

4 comments:

  1. கவிதை மிக அருமை.... உங்க எண்ணம்... அக்கறை.... பெறுமைப்படுகிறேன்...
    வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. சமுதாய நோக்கிலான கவிதை..கவிதையாகப் பாராமல் கருத்தாகப் பார்க்கிறேன்...செய்வோம்..

    ReplyDelete
  3. நன்றி கருணாகரசு

    நன்றி புலிகேசி

    நன்றி சிவாஜி சங்கர்

    ஜேகே

    ReplyDelete