காதலா காதலா இது தான் காதலா
தன்னை ஈதலால் தந்தது காதலா
தனை ஈர்த்ததால் ஈன்றது காதலா
காதலா காதலா இது தான் காதலா
சேர்தலால் கொண்டது காதலா
நீ அன்றி தேய்தலாலானது காதலா
ஊடலால் ஊர்ந்தது காதலா இல்லை
கூடலில் சுரந்தது காதலா
இல்லத்தால் ஆனது காதலா உனை
உள்ளத்தால் ஏற்றது காதலா
தாழ்தலால் வளர்ந்தது காதலா நீ
ஏற்றதால் படர்ந்தது காதலா
பருவத்தின் களவாய் காதலா
அருவத்தின் அளவாய் காதலா
முதுமை ஆனதால் காதலா உன்
பதுமை மனதால் வந்தது காதலா
உன் உணர்வே தான் காதலா
உள்ளுணர்வே தான் காதலா
நீயில்லா சாதலும் காதலா
சாதலில் வாழ்தலும் காதலா
காதலா காதலா இது தான் காதலா
இது மனதில் வந்த காதலா
ReplyDeleteஇல்லை மதியில் வந்த காதலா
இது அன்பில் தோய்ந்த காதலா
இல்லை மையில் எழுந்த காதலா
நண்பா! சொல்வாயா காதிலே?!
-கேயார்
உன் உணர்வே தான் காதலா
ReplyDeleteஉள்ளுணர்வே தான் காதலா
நீயில்லா சாதலும் காதலா
சாதலில் வாழ்தலும் காதலா/////
அருமை அருமை... :)
இது தான் காதல்..
இது தான் காதல் :)
ReplyDeleteகவிதையாய் வாழ்த்துக்கு நன்றி கேயார்,
ReplyDeleteவந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜெஜெ
ReplyDelete