Friday, June 4, 2010

கவலை

இறைவனிடம் வரம் வேண்டி நின்றேன்
இருக்க நிலம் தந்தான்;
பசி தீர உணவும், தாகந்தீர தண்ணீரும்
கூரையாய் வானும் தந்து உபசரித்து,
'வேறென்ன வேண்டும்' என்றான்.

யாவும் பெற்ற பெருமிதத்தில்,
'என்றும் நிலையாய் உன்னை
நினைத்திருக்க வேண்டுமென்றேன்!'

கவலை தந்தான்!!

5 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  2. யாவும் பெற்ற பெருமிதத்தில்,
    'என்றும் நிலையாய் உன்னை
    நினைத்திருக்க வேண்டுமென்றேன்!'

    கவலை தந்தான்!! //
    கவலைகள்தான் கடவுளை நினைக்க வைக்கிறது...
    கவிதை மிக யதார்த்தம்.... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. நன்றி கமலேஷ்

    உண்மைதான் கருணாகரசு எது ஒன்றின் தேடுதலோ அல்லது வேண்டுதலோ இல்லை எனில் அதன் முக்கியத்துவம் இல்லாது போகிறது என்பது எனது அனுபவம் இது கடவுளுக்கும் பொருந்தும் மனிதரின் உறவுகளுக்கும் அவரின் பாச நேசத்திற்க்கும் கூட பொருந்தும் ...

    வாழ்த்துக்கு நன்றி கருணாகரசு

    ReplyDelete