Saturday, June 26, 2010

யாதுமாகி!

நேற்றாகி, இன்றாகி, பொழுதாகி,
என் ஆலம்விழுதாகி, வேராகி,
எனை சுமந்து,
இன்று நான் சுமக்க விரும்பும் தேராகி,
நிற்கும் தெய்வமாகி,
தொழுது பெரும் வரமாகி,
அது கிட்டா சோகமாகி,
தரும் நினைவுமாகி,
என்னுள் யாதுமாகி நின்றாய்
என் தாயே!

Thursday, June 24, 2010

ஜனனம்!

நிதம் பிறக்கும் பிறவி நான்,
இருட்டு கருவறையாய் உறக்கம்!
விழிக்க ஜனனம், எனக்கிது
தினமும் நடக்கும் பிரசவம்!

Friday, June 4, 2010

கவலை

இறைவனிடம் வரம் வேண்டி நின்றேன்
இருக்க நிலம் தந்தான்;
பசி தீர உணவும், தாகந்தீர தண்ணீரும்
கூரையாய் வானும் தந்து உபசரித்து,
'வேறென்ன வேண்டும்' என்றான்.

யாவும் பெற்ற பெருமிதத்தில்,
'என்றும் நிலையாய் உன்னை
நினைத்திருக்க வேண்டுமென்றேன்!'

கவலை தந்தான்!!