இன்றைய கவிதை
Wednesday, April 4, 2012
தன்னிரக்கம்
தன்னிலே ஈன்றவள்
தன்னையே ஈன்றவளுக்கு
தாயாக, உறவில்
ஈன்றதே இரையாக
இரையானதை காத்திடவே
ஈன்றவரே இறைவனாகி
தன் இரக்கம் காட்டிடுவாரே
Friday, March 30, 2012
விடியலுக்கு காத்திரு!
கதிரும் வாராது
நிலவும் போகாத
உறக்கம் கலைந்தும்
விழிப்பு வாராத வேளையில்
போர்வையில் பதுங்கும் மனது..!
கோர்வையாய் கனவை
மீண்டும் துவக்க,
இனிதாய் விடியல்
மெதுவாய் எட்டிப்பார்க்கும்...
இடராய் பிள்ளை இடம் கேட்கும்..
கழுத்தோடு முகம் புதைக்கும்,
ஆயுளின் பலனாய் சுகம் காட்டும்,
விடியல் முழுதாய் வந்து நிற்கும்!
சுகம் பெறும் மனம் மீண்டும்
விடியலுக்கு காத்திருக்கும்...!!
Wednesday, March 28, 2012
வேற்று முகம்
என் வீட்டு
மழலைக்கும்,
முதுமைக்கும்
வேற்று முகமுண்டு...
பாராதோரை பார்த்ததில் வரும்
மழலைக்கு...
பார்த்தோரையே பார்த்திருக்க வரும்
முதுமைக்கு...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)