Saturday, November 6, 2010

தீபாவளி!

தீப ஆவளி வைத்து லஷ்மியை வரவேற்க
ஒரு திருநாளாம்
நரகாசுரனை கொன்ற நன்னாளாம்
புத்தாடை ஒன்று வீட்டில் ஒவ்வொருவருக்கும்
வாங்க வேண்டுமாம்
எண்ணெய் தேய்த்து காலையில் மூழ்கி
திண்பண்டம் உண்டு வெடி வெடித்து கொண்டாடி
பெரியோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று
என நீண்ட பட்டியலை
பெரியவர் ஒருவர் விவரித்திருந்தார்
நடுரோட்டில் மற்றோருவரிடம்.


கேட்டிருந்த
பிளாட்பார சிறுவனுக்கு பல கேள்வி
லஷ்மி யார், புத்தாடை என்றால் என்ன
காலையில் முழ்கி என்றால் எங்கே
திண்பண்டம் என்பது என்ன
பெரியோர் என்றால் யாரவர்கள்?


விடை தெரியா வினாவோடு
பார்த்தவனுக்கு வெடி சத்தம் மட்டுமே புரிந்தது
பிளாட்பார வாசத்தில் தினமும் தீபாவளி
கார்ப்பரேஷன் வசதியில் அவனுக்கு
இன்றும் உண்டு!




மத்தாப்பாய் வெடியாய்
பூச்சரமாய் தரை சக்கரமாய்
புஸ்வாணமாய் இறுதியில்
புகையாய் காசும் காலமும்
கரையும் தீபாவளியில்
வெடிச்சத்தம் போல்


அம்மா அப்பாவுடன் இருப்பது மட்டும்
நிற்குது நினைவில்!



கவலையும் புகையாய் கரையும்
வெடியும் சத்தமாய் விடியும் காலமும்
முன் நிற்குது
இனி தீபாவளி காலை மட்டுமல்ல
என்றும் இனிப்பாய் இருந்திடும் என
இருள் விலக வெடி வைப்போம்
மனக்குறை அகல புகை வாசம்
நுகர்ந்து முன் நகருவோம்
காலம் மத்தாப்பாய் பூச்செரிக்கும்
சேர்ந்தே நாமும் சிரித்திருப்போம்!


உங்கள் யாவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment