"Divorce comes before Marriage" in English Dictionary... தமிழர் நாங்கள் பண்பாடு காப்பவர்கள்....! அகராதியைப் புரட்டுங்கள், "திருமணத்திற்குப் பிறகுதானே விவாகரத்து வருகிறது!"
கைகள் உணர்வாய் மொழிக்கும் மௌனமாய் காதல் காமமாய் எழுதும் கவிதையாய்
மயிர்க்கால் அசைவும் மனசுள் அலைபாயும் சிரிக்க சிரிக்க சிலிர்த்துப் போகும்
வெட்கம் விட்டு விரசம் மறந்து விரகம் உணர்ந்து வளர்த்த தீபம் இன்னும் அணையவேயில்லை! ஒளியாய்ப் பக்கத்தில்!
நடு சாமத்தில் 'தொம்' என்று கால்போட்டு தூக்கம் கலைக்கும் என் வீட்டுக் கொழுந்து!!
தாலாட்டி மடி ஆடும், நாவும் பாட்டு பாடும், மனம் மட்டும் அன்றைய நினைவை அசைபோட்டு, என்றும் எனக்கு அழகாய், உறங்கும் மனைவியைப் பார்த்து, பெருமூச்சு விடும்! மடி ஆட்டிக்கொண்டே!