Thursday, March 11, 2010

மனைவி!

இளமையில் முதுமையின் அனுபவந்தந்து
முதுமையில் இளமையின் சுகந்தருவாள்

இருக்கும் வரையில் இல்லாதிருப்பாள்
இல்லாதிருக்க ஏங்க வைப்பாள்

வாழ்வோடு இழைந்தது அறியாது
நாம் இருப்போம் அவளோடு
அவளன்றி வாழ்வொன்று இல்லாதுபோமோ?

அவளற்ற மெளனம் கொல்லும்
அவளோடு மெளனம் என்னை வெல்லும்

எல்லாம் அறிந்தும் ஊடல் தொடரும்
அவளோடு என் உலகம் வளரும் !!

Monday, March 8, 2010

Women's Universal Message to Men!

I do NOT want to be a FEATHER IN YOUR CAP;
NOR I want to be a PATCH IN YOUR HEELS;
What I NEED is
EQUAL / FRIENDLY RELATIONSHIP FOREVER!!

P.S: Are you listening to me?!

Thursday, March 4, 2010

தாயின் பிரிவு

ஐந்து வயதில் முதன்முறையாக
அழுதேன் தாய் என்னை
பள்ளியில் விட்ட பொழுது

இருபதுகளில், நானே
என்னை வேலையில் தொலைத்தபொழுது

இப்பொழுது மீண்டும்
என் தாய் தொலைபேசியில்
பேசும்பொழுதெல்லாம்...

நான் தனியாய் வெளிநாட்டில்
தொலைந்துள்ளபோது…!

Monday, March 1, 2010

என்றோ எழுதிய கவிதை - 15

காலேஜு போவுறப்போ, இன்னா நோட்டாயிருந்தாலும் மொத பக்கத்துல பிள்ளையார் சுழியோட, நடுவுல சின்னதா ஒரு கவிதை இருக்கும். சில சமயம் ஸீரியஸாவும், பல சமயம் லொள்ளாவும், அந்த வயசுக்கேத்த எதிர்பார்ப்போட, ஏக்கங்களோட இருக்கும். அப்படி நான் எழுதிய ஒரு கவிதை............

பாவை நீ
பூவை வைத்தாய்.......
பொட்டும் வைத்தாய்...
நெஞ்சை மட்டும்
ஏன் விட்டு வைத்தாய்?!!

புரியாதவங்களுக்குச் சுளுவாக

பாவை நீ
பூவை வைத்தால் கூந்தலுக்கு அழகு...
பொட்டு வைத்தால் நெற்றிக்கு அழகு...
நெஞ்சில் என்னை வைத்தாலோ அழகோ அழகு!

திருவல்லிக்கேணி •ப்ரெண்ட்ஸை பாத்துட்டு, 45B பஸ்ல, (ஈவினிங்) காலேஜ் போற ரூட்டுல (தொங்கிகினே) நோட்டை ரோட்ல விட்டுட்டேன்! ஸ்லோவா பஸ் போனதுல எப்படியோ இறங்கி நோட்-ஐ தேடி (ஓடி!) வந்தேன். அதற்குள் யாரோ எடுத்து கைல வெச்சிருந்தாங்கோ.

டேங்க்ஸ் சொல்லி 'ஜுட்'றதுக்கு முன்னாடி, எடுத்து வெச்ச மகராசனோட கிண்டல் கேள்வி "நோட்புக்கை(யும்) ஏன் விட்டு வைத்தாய்?!"

Saturday, February 27, 2010

சுஜாதா!


மரபுக் கவிதைகளுக்கு நடுவே
ஒரு புதுக்கவிதை!

நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குள்
ஒரு போன்ஸாய்!

வீட்டுக்கு வீடு ஜன்னலில்
குடி புகுந்த புது நிலவு!

ஞான தாகத்தை லேசாய்
தீர்த்த பானகம், பருகிட
மீண்டும் தாகம் தரும் அமுதம்!

உன் புத்தகங்கள் படித்தாலும் ரத்த அழுத்தம்
படிக்காவிட்டாலும் தான்!

உன் எழுத்துக்கள் வந்தது
நன்கறிந்த தமிழ் வார்த்தையில் தான்
ஒவ்வொரு முறையும் புதுமணப்பெண்ணாய்!

சங்க இலக்கியம் போல் நீ
தந்தது தொழில்நுட்ப இலக்கியம்
பாமரனையும் பட்டதாரியாக்கினாய்!
பட்டதாரியையும் பாமரனாக்கினாய்!!

பாதரசம் போல் உன் படைப்புகள்
படிப்போரின் திறன் பொறுத்து
உருவம் பெறும்!

பழரசம் போல் உன் கருத்துக்கள்
ருசிப்போரின் ரசனை பொறுத்து
ரசிப்பு தரும்!

அருவம் ஆகி நின்றபோதும்
உருவமாய் இருக்கின்றாய்
பல நூல்களில்,

உன்னை பத்திரமாய் வளர்த்து வருவேன்,
என் அகத்தில் நூலகமாய்,
வளர்ந்த பின் என் பிள்ளை
படிக்க கொடுப்பதற்கு!


எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் மறைந்த வருடம் எழுதப்பட்டது.
திரு சுஜாதா நினைவு நாள் - 27/02/2010.